இப்படியும் ஒரு தரிசனம் கிடைக்கும் என்று எள்ளளவும் நினைக்கவில்லை.
ஆம். திருப்பதி ஸ்ரீனிவாசனை காண வேண்டிய பயணம்...
கடந்த செவ்வாய்க்கிழமை தி நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் சென்று அழுது வேண்டினேன். அடுத்த செவ்வாய் -க்குள் உன்னை காண வரம் தா என்று!.
ஏன் வேண்டினேன் - நிரம்ப மாதங்கள் ஆயிற்று!
ஒரு பக்கம் CORONA வைரஸ் உலகையே தாக்குகிறது. social distancing - ஒரு மிக பெரிய தேவை என்ற நிலைமை. மனதிற்குள் ஒரே சஞ்சலம்.
மற்றொரு பக்கம், இதை ஏதும் எண்ணாமல் "எல்லாம் அவன் செயல் - சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" என்பது போல அவன் மேல் பாரத்தை போட்டு புறப்பட்டேன் திருப்பதிக்கு ரயில் மார்க்கமாய் திங்கள் அன்று.
தங்குவதற்கு ஒரு இடம் தேடி பிடித்து கொஞ்சம் ஆசுவாச படுத்திவிட்டு உணவு அருந்த சென்றேன்.
இரவு மணி 8.15. ஆங்காங்கே ஒரு சில மாமா மாமி-களின் உரையாடல்கள்.
ஒரு மாமா மாமி - free darshan ட்ரை பண்ணலாமா என்று பேசி கொண்டிருக்க, நாங்களும் போவோம்ல - என்ற வடிவேலு போல், அவர்களிடம் permission (கூட வர) சற்றும் வெட்கமே இல்லாமல் கேட்டு பின் தொடர்ந்தேன்
கரும்பு தின்ன கூலியா!
பிக் பாஸ்-இல் சொல்வது போல - மணி 8:20.
free பஸ்-இல் ஏறி, தர்ம தரிசனம் க்யூ -வில் சேர்ந்து சென்றோம்.
"நடந்த கால்கள் நொந்தவோ" - என்று ஆழ்வார் பாடியது சாரங்கபாணி பெருமாளை நோக்கி. இங்கே நடக்கும் கால்கள் செல்வது வேங்கடவனை பார்க்க அல்லவா!.
நாங்கள் 5 பேர் ஒன்றாக நடந்து சென்று சன்னதி செல்வதற்கு சற்று முன் வரை நடந்தோம் (படிக்கவும் - நடந்தோம்). Checking எல்லாம் கூட நேரம் எடுக்கவில்லை.
2 இடங்களில் தான் ஒரு 5 - 7 மினிட்ஸ் நிற்க வேண்டியதாக இருந்தது. கர்ப கிரஹம் ஐ நோக்கி செல்ல செல்ல என்ன ஒரு ஆனந்தம்!.ஆம். இடத்தின் பெயர் ஆனந்த நிலையம் தானே!. வாய் விஷணு ஸஹஸ்ரநாமத்தை சொல்லி கொண்டிருக்க கண்கள் அந்த "தாமரை கண்ணினன்" (Refer திருமங்கை ஆழ்வார் decad பெரிய திருமொழி 1-8) அழகை காண ஆயிரம் கண் வேண்டாமோ!
திருமங்கை மன்னன் பாடியது போல,
"கொங்கலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்...
செங்கயல் திளைக்கும் சுனைத் திருவேங்கடம் அடை நெஞ்சமே!"
Free தர்ஷன் நிஜமாகவே free ஆக இருப்பது போல - மிக மிக நன்றாக ஒரு சேவை. நின்று நிதானமாய் ஒரு தரிசனம்.
கடுகளவும் எதிர்பார்க்காத சேவை!.
நிற்க - தாயார், கோவிந்தராஜர்,வராஹர், பின் வேங்கடமுடையன் - இது தான் முறை!.
ஆனால் சில காரணங்களால் இந்த order follow செய்ய முடியவில்லை. இருப்பினும், எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் இருந்த போதும் "ஜெரகண்டி" என்று சொல்லாமல் பிடித்து தள்ளாமல் நன்றாக எல்லாரும் மகிழ்வுறும் படி செய்த TTD- க்கு ஒரு பாராட்டு.
குலசேகர பெருமான் வேண்டியது போல,
"ஊனேறு செல்வத்து பிறவி யான் வேண்டேன்.....
செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!"
செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!"
ஏதேனும் ஆவதற்கு கூட அவர் திருவுள்ளம் இசைய வேண்டுமென்றோ!
இனி corona உலகிற்கு வரக்கூடாது என்று வேண்டுவோம்!
வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா!
நீங்கள் பேசுவதும், எழுதுவதும் ஒரே மாதிரிதான் உள்ளது - simple & straight from the heart .👍🏼 அருமையான அனுபவப் பதிவு.👌🏼 ஓம் நமோ பகவதே வாசுதேவாய.🙏🏼
ReplyDelete